Posts

Showing posts from January, 2022

சரக்குச் சங்கிலி-11: லாரி டிரைவர்களை ஏன் திட்டறாங்க?

Image
ரமேஷ் குமார் டில்லிலிருந்து  வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்..... கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்..... ஞாபகம் இருக்க இந்த கதை?  மறந்து போயிருக்க சான்ஸ்.  பரவாயில்லை. இங்கே ப்ரஷ் அப் பண்ணிக்கலாம்...  க்ளிக் பண்ணுங்க இங்க...   இதே கதைதான் அமெரிக்காவில் இப்போது.  கோவிட் வந்ததில் இருந்து, சாமான் தட்டுப்பாடு.  சீனாவிலிருந்து கப்பல் வரவில்லை.  அப்படியே வந்தாலும், துறைமுகத்தில் நுழைய அனுமதி இல்லை.  அப்படியே அனுமதி இருந்தாலும், கப்பலில் இருந்து கீழே இறக்கி வைக்க ஆள் இல்லை.  அப்படியே இறக்கி வைக்க ஆள் இருந்தாலும், வெளியே கொண்டு போக  லாரி இல்லை.   அப்படியே லாரி இருந்தாலும், லாரி ஓட்ட டிரைவர் இல்லை.  இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலமையில் முன்னேற்றம். கப்பல் வந்து, துறைமுகத்தில் நுழைய அனுமதி கிடைத்து, இறக்க ஆள், லாரி, டிரைவர் கிடைத்து, வேண்டிய சாமான்கள் கடைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டது.  ஏதோ கொஞ்சம், கொஞ்சம்.  ஆனால், ஒரு புது ப்ராபளம் ...  லாரிக்காரர்களை வசை பாடுகிறார்கள்.  சிம்பிளா சொ...

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்

Image
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  உடம்பு சரியில்லை. காய்ச்சல். ஊசி போட்டுக்க டாக்டர்கிட்ட போனால் நம் குழந்தைகள் அடம்பிடிக்கும். உண்மைதானே?  அதேமாதிரி, நம் வீட்டில் யாருக்கோ அம்மைப் போட்டிருந்தால், வெளியாருக்கு வீட்டினுள் அனுமதி மறுப்போம். உண்மைதானே?  இச்செயல்கள் யாவும், எல்லார் நன்மைக்குத்தானே? இது பலருக்கு  புரிய மாட்டேன் என்கிறது. இந்த கூட்டத்தில், கனடா தேசத்தில் இருக்கும் லாரி டிரைவர்களும் அடக்கம். கனடா தேசம், வட அமெரிக்காவில் உள்ளது. நிறைய இந்தியர்களும் நிரந்தரமாக  வசிக்கின்றனர். நிறைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டிரக் டிரைவர் காலகாலமாக செட்டில் ஆகிவிட்டார்கள். கனடாவின் கிழக்கிலிருந்து மேற்கே செல்ல, கடக்க  வேண்டிய தூரம்: 5500 கிலோமீட்டர். ஒப்பீட்டால், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தூரம்: 3500 கிலோமீட்டர். அமெரிக்கா-கனடா போக்குவரத்து அதிகம். கனடா 308 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்கிறது அமெரிக்காவுக்கு. 320 பில்லியன் டாலர் இறக்குமதி அமெரிக்காவிலிருந்து. . ஒட்டுமொத்தமாக, 630 பில்லியன் டாலர் வியாபாரம் நடக்கிறது இந்த இரண்டு நாடுக்கிடையே...

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

Image
ரமேஷ் குமார் டெல்லியிலிருந்து  ஜெப் பேஸ்ஒஸ் (Jeff Bezos) உலகத்திலேயே பெரிய செல்வந்தர்களில் டாப் மூன்று இடங்களில் அங்கம் வகிப்பவர்.  கொரானா காலத்தில் மட்டும் சம்பாதித்த பணம் பல கோடிகள். இன்று அவருடைய மொத்த சொத்து 180 பில்லியன் அமெரிக்கன் டாலர். (1000 மில்லியன் = 1 பில்லியன்.  10 லக்ஷம் = 1 மில்லியன். ஒரு அமெரிக்கன் டாலர் = 75 இந்திய ரூபாய்).  இவருடைய முதல் இடத்துக்கானப் போட்டி இந்தியா வர விரும்பும் எலக்ட்ரிக் கார் உலக நாயகன் இலன் மஸ்க் (Elan Musk) கூட.   நமக்குத் பிரபலமான அமேசான் இவருடைய கம்பெனி. இந்த கம்பெனி பற்றி நிறையப் பேருக்கு ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது. பல நாடுகளில் சென்று அந்நாட்டு சிறு வியாபாரிகளை முழுங்கிவிட்டது இந்த அமெரிக்கன் கம்பெனி. இந்தியாவிலேகூட இந்த குற்றச்சாட்டு உண்டு. வழக்குகள் தொடர்கின்றன இங்கேயும். சமீபத்திய பியூச்சர் கம்பெனி-அமேசான் வழக்கு குறிப்பிடத்தக்கது.  அமேசனைப்பற்றி கடுமையாக விமசரிக்கப்பட்ட புத்தங்கள் ஏராளம் உலக அளவில். சொல்லப்போன, பெயர் ரிப்பேர். நல்ல பெயர் எடுக்க அமேசான் முயற்சி செய்வது என்னவோ உண்மை. உதாரணமாக, ...

சரக்குச் சங்கிலி-8: அமெரிக்க லாரி டிரைவர்கள் கதி என்ன?-1

Image
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  சொன்னால்,   நம்ப மாட்டிர்கள்.  நிஜமாகவே, வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்கிறன்றர். ஏன் தெரியுமா? கொரானா பயம்தான். வேறு என்ன.  அமெரிக்காவில், 75 சதவிகிதம், ரோடு ட்ரான்ஸ்போர்ட்தான் சரக்கு பரிமாற்றத்துக்கு.  அதாவது, லாரி போக்குவரத்துதான். நம் ஊரை விட கெடுபிடி அதிகம்.  ஒரு நாளைக்கு 11 மணி நேரம்தான் வண்டி ஓட்ட முடியும். ஏமாற்ற முடியாது. ஏனென்றால், எலக்ட்ரானிக் கருவி மூலம் எல்லா விஷயங்களும் பதிவு ஆகிடும்.  11 மணி  நேரத்துக்கு மேல் வண்டி ஓட்டினால்,  அபராதம். டிரைவர் அப்படி செய்தால், டிரக் முதலாளி அபராதம் கட்டணும். டிரைவர் ஓய்வுப் பற்றி அதிக கவனம்.  நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்த முடியாது. பெரிய டிரக் பார்க்கிங் நிறைய இருக்கு. எல்லா வசதிகளும் உண்டு. குளிக்க. உண்ண. கட்டணம் உண்டு.  டீசல் திருட்டு? அப்படின்னா? அந்த மாதிரியான திருட்டுத்தனம் கேள்விப்பட்டதில்லை. போற வழியே கொலை அல்லது சரக்கு கடத்தல்/அபகரிப்பு ரொம்ப குறைச்சல்.  நம்ம ஊர் மாதிரியே அங்கேயும் நிறைய டிரைவர்-ஓனர். அவர்களுடைய சங்கம் தனி. புரோக்...

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

Image
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரெடி . ஸ்டெடி. .... "கோ" ஒன்றுதான் மிச்சம்.  அந்த விசில் எப்போ ஊதப்படும்? நிறைய கண்கள் பார்த்தவண்ணம் இருக்கின்றன. எங்கே இருந்து  கேட்டால் , தமிழ்நாடு, கர்நாடகா, வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலுங்கானா.  இது என்ன ஓட்டப் பந்தயம்?  வேற  என்ன.... எலக்ட்ரிக் அல்லது மின்சார கார் தயாரிப்புதான்.  யார் கூட?  உலக எலக்ட்ரிக்  கார் நாயகன் டெஸ்லா சொந்தக்காரர் இலன் மஸ்க். யாரோ அவரோட ட்விட்டர்லே "இந்தியா வர எதாவது திட்டம் இருக்கானு" கேட்டபோது, மஸ்க் "வருவேன்"னார். அதைத் தொடர்ந்து, 2021லே இந்தியாலே ஒரு டெஸ்லா ஆபிஸ் திறக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் கொஞ்சம் குஷி. யார்தான் வரவேற்க மாட்டார்கள் டெஸ்லாவின் வருகையை?  இந்தியாவின் சிகப்பு ஜமுக்காள வரவேற்பை முன்னே வைத்து, மஸ்க் சில சலுகைகள் பட்டியல் போட்டார். வரி சம்பந்தப்பட்டவை அவை. முழு எலக்ட்ரிக் காரையும் இந்தியாலே தயாரிக்க முடியாது. சில பாகங்கள் ஒகே என்று சிக்னல் காட்டப்பட்டது அமெரிக்காவிலிருந்து.  ஒரு டெஸ்லா காரை இறக்குமதி செய்தால், அதன் விலை இரட்டிப்பாகிறது. ...

சரக்குச் சங்கிலி-6: அடேங்கப்பா, இத்தனை லாபமா?

Image
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல் கம்பெனிகள் லாப வெள்ளத்தில் மிதக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகைப்படுத்தல் ஆகாது. 100 சதவிகிதம் உண்மை. கோவிட் வந்ததின் விளைவு எனலாம். எப்படி? கோவிட் சீனா "ஏற்றுமதி" செய்த யாரும் ஆர்டர் செய்யாத ஒரு வியாதி. வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வேண்டாத பொருள். வருடம் 2019 கடைசியில் ஆரம்பித்த இந்த கூத்து முடியும் என்று யாருக்கும் தெரியாது. இந்த சர்வதேச பரவல் (Pandemic) ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஈரான், ஜப்பான், ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா, இந்தியா  வரை பரவல்.  1918ல் கூட இந்த மாதிரி ஒரு சர்வதேச பரவல் (Spanish Flu) ஏற்பட்டு லக்ஷக் கணக்கானவர்கள் மடிந்தனர். அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரு பெரிய வித்யாசம்: நூறு வருடங்களுக்கு முன் உலக நாடுகள் மத்தியில் வியாபாரம் இருந்தது.  ஆனால், இன்றைய அளவில் இல்லை. தவிர, சீனாவின் மீது சார்பு இன்றைய அளவில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி பங்கு தீவிரமாக ஏறிப்போய் விட்டது.  உலக வர்த்தக அமைப்பின் (World Trade...

சரக்குச் சங்கலி-5: சங்க காலத்து கடல்சார் புலமை

Image
ரமேஷ் குமார் டெல்லியிலிருந்து  சில நாட்களுக்குமுன் சங்க காலத்தில் பண்டகச்சலை அல்லது வேர்ஹவுஸ் புழக்கத்தில் இருந்தன என்று தெரிந்துக் கொண்டோம். பட்டினத்துப்பாலை பாடல் உதவியது.  புறநானுறு இலக்கியத்தை ஆராயும்போது, அங்கேயும் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களின் கடல் முதிர்ச்சி (Maritime maturity) வெளிப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த, அமெரிக்காவில் வாழும்  தமிழ்பிரியர் பிரபாகரன் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.  புறநானுற்றின் 343 பாடலைப் பற்றிய அவரது கருத்துக்கள் ஒரு புது உற்சாகத்தை எழுப்பியது. இப்பாடலில், முசிறி என்ற முக்கியமான துறைமுகப்  பட்டினத்தின் பொருள் வளமையைப் பற்றி பேசப்படுகிறது. முதலில் பாடலைப் பார்ப்போம்:                          மீன்நொடுத்து நெற்குவைஇ                          மிசையம்பியின் மனைமறுக்குந்து;                        ...

சரக்குச் சங்கிலி-4: இந்தியாவின் பொருளாதார பல்ஸ்

Image
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ஓமைக்ரான் . மூன்றாவது அலை கோவிட் தொற்று நோய் ஒருபக்கம். லொகேஷனல் லோக்கடவுன் அல்லது இருப்பிட பூட்டுதல். கோவிட் அளவுக்குக் கொடூரமா என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  இந்த ஓமிக்கிறான் எப்ப ஒழியுமுன்னு தெரியலை. கவலைதான்.  இன்னொருபக்கம், சில நல்ல செய்திகளும் வரது. என்ன நல்ல செய்தி? ஏற்றுமதி வியாபாரம் ஏக் தம் சூப்பர். 300 பில்லியன் அமெரிக்க டாலர் (ஒரு அமெரிக்கா டாலரின் மதிப்பு 74 ரூபாய்) தொட்டு இருக்கு கடந்த ஏப்ரலென்று டிசம்பர் 2021 வரைக்கும். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போன வருஷம்  2021-22 பட்ஜெட் வெளியிடும்போது நடக்கும் நிதி ஆண்டில் (ஏப்ரல் 2021-மார்ச் 2022), ஏற்றுமதி 400 பில்லியன் அமெரிக்கா டாலர் இருக்கும்னுக் கணித்தார். அந்த அறிக்கையை  வச்சுப் பார்க்கிறதே, இந்தியா இப்பவே மூணுல நாலு பங்கு வியாபாரம் பண்ணி ஆச்சு. Good show. போன வாரம், ஒரு அரசாங்க அறிக்கை வெளியிட்ட தகவல்: நடக்கும் நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 9.2 சதவிகிதம் இருக்கும் என எதி...

சரக்குச் சங்கிலி-3: மிலிட்டரி லாஜிஸ்டிக்ஸ்-1

Image
ரமேஷ் குமார் டில்லியிருந்து...  புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர்  பாடினான் கண்ணதாசன், சிவாஜி கணேசன் நடித்த ரத்தத்திலகம் படத்திலே.  சண்டை போடாத அரசன் இல்லை. பூச்சூடாத அரசி இல்லை.  போர் ஒரு யதார்த்தமான நிகழ்வு. ராமாயணம். மஹாபாரதம். முதல் சிலுவைப் போர். இரண்டாவது சிலுவைப் போர். நபிகள் நாயகத்தின் பத்ர் போர். காலம் காலமாக நடக்கும் வழக்கமான அம்சம்.  சண்டைனா, கத்தி, கேடயம், குதிரை, யானை, வீரர்கள். அந்த காலத்தில். நவீன உலகில், தாங்கிகள், பீரங்கிகள் , ஏவுக்கணைகள் , ... ஏகப்பட்ட விஷயங்கள். எத்தனை நாள் சண்டை நடக்கும் என்று தெரியாது.  சண்டை நடக்கும் இடமெல்லாம் உறைய வசதி. உண்ண வசதி. மருத்துவம். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எல்லா தேவைகளும் பூர்த்திச் செய்ய ஏற்பாடுகள். ஓண்ணு ரெண்டு பேர் இல்லை. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கை. பெரிய பொறுப்பு.  இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு யாரோடது தெரியுமா?  லாஜிஸ்டிக்ஸ் பிரிவு. இந்த வார்த்தையின் மூலாதாரம் ராணுவம். சரியான நேரத்திலே தேவையான கருவிகளோ சாமான்களோ கிடைக்காவிட்டால், போரின் முடிவு சாதகமாக ...

சரக்குச் சங்கிலி-2: சங்க காலப் பண்டகச் சாலைகள்

Image
  ரமேஷ் டில்லிலிருந்து ... தமிழன் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தது ஒன்னும் புதுச் செய்தி  இல்லை.  திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு சொன்னது நம்ம முன்னோர்கள்தானே!  தமிழ்நாட்டின் கடலோரத் துறைமுகங்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. கொற்கை. பூம்புகார். காவேரிப்பூம்பட்டினம். மாமல்லபுரம்.   சங்க கால இலக்கியங்கள் பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கப்பலில் ஏற்றுவது அல்லது இறக்குவது ஒரு பக்கம். இந்த ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கம்: பொருள் சேகரிப்பு துறைமுகத்துக்கு அருகில். எல்லா பொருள்களையும் வெட்ட வெளியில் வைக்க முடியாது. போதாக்குறைக்கு, உடனுக்கு உடன் ஏற்ற கப்பல் அல்லது நாவாய் கிடைக்குமா என்பது சந்தேகம். அதே போல் , இறக்கும் பொருளை நாட்டுக்குள்ளே அல்லது நகரத்துக்குள்ளே கொண்டுச் செல்ல வண்டி உடனுக்குடன் கிடைக்குமா  என்பதும் சந்தேகம்தான்.  அப்படியானால், வணிகர்கள் என்ன செய்தார்கள்? துறைமுகத்தினருகில் பண்டகச் சாலைகள் இருந்தனவா? இது என்னக் கேள்வி?  கட்டாயம் இருந்து இருக்க வேண்டும். எனவே, நாம் இப்போது பேசும் கோடௌன்  ...

சரக்குச் சங்கிலி-1: ஒரு அறிமுகம்

Image
ரமேஷ் டில்லியிருந்து இது என்ன பெயருன்னு யோசிக்கிறீங்களா?  ஆங்கிலத்திலே சப்ளை செயின் (Supply Chain) சொல்றதோட தமிழாக்கம். இந்த Covid வந்தாலும் வந்தது, இப்போ சப்ளை செயின் என்கிற வார்த்தை ரொம்ப சகஜம்.  பிரதமரும் அடிக்கடி சொல்றர்  இந்த வார்த்தையை. சந்து முனையிலே இருக்கிற மளிகைக்கடைக்காரரும் சொல்றர். அத்தனை பிரசித்தம். சொல்லப்போனா, இந்த  சரக்குச் சங்கிலி    நம் வாழ்க்கையோட பிணைந்தது.  கடைக்கு சாமான் வாங்கப்போன, சில நேரங்களில் ஸ்டாக் இல்லை (Out of Stock)  நம்ம கேட்ட பொருளுக்குன்னு சொல்லுவாங்க. ஏன்?  ஏகப்பட்ட காரணம் இருக்கும்: ஒன்னு, உற்பத்தி குறைச்சல். இன்னொன்னு, ஐட்டம் ரெடி. ஆனால், சரக்கு அனுப்ப வண்டி இல்லை.  இன்னும் கொஞ்சம், ஆராய்வோம்.  ஏன் உற்பத்தி குறைச்சல்?  அந்த ஐட்டம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் (Raw Materials) தட்டுப்பாடு. உதாரணத்துக்கு, கார் (car) எடுத்துப்போம்.  தெரியுமா உங்களுக்கு,ஒரு காருக்குள் சுமார் 2000 உதிரி பொருட்கள் இருக்குன்னு?  மாருதியோ, ஹ்யுண்டையோ, ஒரு காரை 100% தயாரிப்பது இல்லை.  என...

புதுப் பயணம்

Image
வருஷம் 2022 ஆரம்பிச்சப்போது, ஒரு புது வகையான பயணம் செய்ய ஆசை வந்தது.  அதாவது, தமிழில் பதிவு செய்யனும்.  இரண்டாவது, நமது இலக்கியங்களைப் படிக்கணும். படிக்கிறதைவிட, கேட்டலே (listening) சுலபம்னு தோணித்து.  கற்றலின் கேட்டலே நன்று! Right?  YOUTUBEலே நிறைய பதிவுகள் இருக்கு.  தினம் கார்த்தாலே 10 கிலோமீட்டர் நடக்கிறதே, பாட்டு  கேக்கிறதுப் பதிலா, இந்த YOUTUBE பதிவுகளை கேட்க ஆரம்பித்தேன்.  கடந்த பத்து நாளாக, திருமூலர் திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் கேட்கிறேன். சங்க கால இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களான்னு கேள்வி எழும்பியிருக்கிறது.  இன்னொரு கிளைப்பயன்: தமிழ் இலக்கண revision ... தாலாட்டு . கிருபானந்த வாரியார் விளக்கம் ... தால் = நாக்கு. ஆட்டுதல் ... நாக்கை ஆட்டி பாடுவது, தாலாட்டு.  தமிழ் பழமொழி...  அடி உதவதுப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.  நம் புரிந்துக்கொண்டது ஒன்று. அதன் உண்மை அர்த்தம்:  " திருவடிகள் உதவதுப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்." திருவடிகள் = இறைவன் மலர் பாதங...

பாட்டு பாடவா, பாட்டு எழுதவா?

Image
  பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்லுவோம் தமிழிலே. அந்த மாதிரி ஒரு அனுபவமாச்சு சமீபத்திலே.  நான் தேடினது ஒன்னு, கிடைச்சுது இன்னொன்னு. ரொம்ப சந்தோஷமான அனுபவம்.  பிலிம் song எப்படி கம்போஸ் பண்றங்கன்னு தெரிஞ்சிக்க ஆசை. YouTube ஏகப்பட்ட சாய்ஸ் கொடுக்கிறது.  அதே மாதிரி, பிலிம் song எப்படி எழுதப்படுகிறதுன்னு தெரிஞ்சிக்க ஆசை. ஜேம்ஸ் வசந்தன் மாட்டினார். போன வருஷம், ஒரு workshop ஏற்பாடு செஞ்சு இருந்தார். ஒரு மணி நேர ப்ரோக்ராம்.  நான் பார்க்க, இல்லை கேட்க போனது பாட்டு எப்படி எழுதப்படுகிறதுன்னு தெரிஞ்சிக்க.  ஆனால், வெளியே வந்தபோது, நான் ஏதோ ஒரு தமிழ் இலக்கண வகுப்புக்கு போயிட்டு வந்த ஒரு உணர்ச்சி. ரொம்ப சந்தோசமா இருந்தது.  நெடில், குறில், உயிர் எழுத்து, உயிர்மெய் எழுத்து, எதுகை, மோனை, தன்மை, முன்னிலை, படர்க்கை. ஒரு பாட்டு எழுத இத்தனை இலக்கண அறிவு தேவையா? ஆச்சரியமா இருந்தது.  படிக்கிறதே, தமிழ் இலக்கணம்  ரொம்ப கஷ்டமாக  இருந்தது. SSLC எக்ஸாமில் ரொம்ப குறச்ச மார்க் தமிழிலேதான். தாய்மொழி தமிழ். அந்த பயத்திலேயே, PUC, Degreeலே சமஸ்க...

கிருபானந்த வாரியாரும் கந்த புராணமும்-1

Image
  முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். பதினொன்னான் கிளாஸ்லே படிச்சது ஞாகபம் வந்ததது.  மலையும் மலையைச்சார்ந்த இடமும் முருக வழிபாடு ஸ்தலம் என சொல்லப்பட்டது. பழனி. சுவாமி மலை. திருப்பரங்குன்றம். திருத்தணி. always something to do with மலை அல்லது குன்று. அதனால்தான் என்னவோ, திருப்பதிகூட முருகர் ஸ்தலம்தான், வெங்கடேச பெருமால் இல்லைன்னு ஒரு கருத்து.  கிருபானந்த வாரியாரை   தெரியாதவர் ரொம்ப குறைச்சல்லன்னு சொல்லலாம். அதுவும் முருகனை வழிபடுபவர் ஆனால், இந்த அற்புதமான மனிதரை மறக்க முடியாது. சமீபத்திலே, இவரோட  கந்த புராணம் சொற்பொழிவு YOUTUBEலே கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி  நேரம்.  தமிழ் தவிர  சமஸ்க்ரிதம் கூட அத்துப்படி. பாட்டு plus கதை. மன்மதனை  சிவன் சாம்பலாக்குகிறார். காரணம்: மன்மதன் காதல் உணர்வை சிவனிடம் பார்வதியின்பால் தூண்ட முனைகிறான். விளைவு: மரணம்.  ரதி, மன்மதன் மனைவி, அழுதுகொண்டே சிவனின் சொல்கிறாள்: "ஒரு பெண்ணுக்கு நான்கு ரோல். குழந்தை/கன்னி. சகோதரி. மனைவி. தாய்.  யாரை வேண்டுமானாலும் அவள் சகோதரனாகவோ சகோதரியாகவோ தனியாகவோ தந்...

முருக நீ வர வேண்டும்

Image
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். - கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர்  கடந்த ஒரு வார காலமாக, முருகன் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் நிறைய வெளிப்படுகிறது.  எதேச்சையாக திருமுருகாற்றுப்படை இந்த புது பயணத்தை தொடங்கியது. YOUTUBE லே ஆரூர் Sundaraman மயிலாப்பூர் கபாலி கோயிலில் நடத்திய ஒரு மணி நேர சொற்பொழிவு கேட்க நேரிட்டது. இந்த நூல் சங்க காலத்து இலக்கியம் என்ற உண்மை தெரியவந்தது. கீ வா ஜா எழுதிய விளக்கவுரையும் கிடைத்தது. இன்னொரு YOUTUBE விளக்கவுரையும் கேட்டபோது, பள்ளிநாட்கள் ஞாபகம் வந்ததது. குறிஞ்சி, முல்லை, etc . கீ வா ஜா அவர் ஆசிரயராக பணியாற்றிய கலைமகள் ஆபீஸ் ஞாபகம் ஆயிற்று. அந்த ஆபீஸ் ஐ தாண்டித்தானே தினம் பள்ளி சென்றது.  கலைமகள் ஆபீஸ் இப்போது ஹௌசிங் complex ஆயிடுது. நண்பர் ஷாந்தி அதில்தான் இருக்கிறாள். மீனு மாமி சுசிலா மாமி ஞாபகம் வந்தது. மீனு மாமி தவறி போயிட்ட சில வருடங்களுக்கு முன். அடுத்த முறை சென்னை போகும் பொது சுஷீலா மாமி ஐ கட்டாயம் பார்க்கணும்.  திருமுருகாற்றுப்படைக்கு பிறகு, கந்தர...