சரக்குச் சங்கலி-5: சங்க காலத்து கடல்சார் புலமை


ரமேஷ் குமார் டெல்லியிலிருந்து 


சில நாட்களுக்குமுன் சங்க காலத்தில் பண்டகச்சலை அல்லது வேர்ஹவுஸ் புழக்கத்தில் இருந்தன என்று தெரிந்துக் கொண்டோம். பட்டினத்துப்பாலை பாடல் உதவியது. 

புறநானுறு இலக்கியத்தை ஆராயும்போது, அங்கேயும் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களின் கடல் முதிர்ச்சி (Maritime maturity) வெளிப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த, அமெரிக்காவில் வாழும் தமிழ்பிரியர் பிரபாகரன் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

புறநானுற்றின் 343 பாடலைப் பற்றிய அவரது கருத்துக்கள் ஒரு புது உற்சாகத்தை எழுப்பியது. இப்பாடலில், முசிறி என்ற முக்கியமான துறைமுகப்  பட்டினத்தின் பொருள் வளமையைப் பற்றி பேசப்படுகிறது. முதலில் பாடலைப் பார்ப்போம்:

                    மீன்நொடுத்து நெற்குவைஇ
                    மிசையம்பியின் மனைமறுக்குந்து;
                    மனைக்குவைஇய கறிமூடையால்
                    கலிச்சும்மைய கரைகலக்குறுந்து;
                    கலந்தந்த பொற்பரிசம்                                                   
                    கழித்தோணியாற் கரைசேர்க்குந்து;
                    மலைத்தாரமும் கடல்தாரமும்
                    தலைப்பெய்து வருநர்க்கீயும்
                    புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
                    முழங்குகடல் முழவின் முசிறி யன்ன                                
                    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
                    புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
                    தந்தையும் கொடாஅன் ஆயின், வந்தோர்

சேரன் செங்குட்டுவன் காலத்தில் முசிறி சிறப்பு வாய்ந்த நகரம். துறைமுகம். முசிறி நகரத்தார்கள் சீரும் சிறப்புமாக வாழ்பவர்கள். காரணம்: பாணர் இந்தப்பாடலில் கோடிட்டுக் காட்டுகிறார். நீர் வளம். நில வளம். கடல் வளம். கடலில் பிடித்த மீனை பண்டமாற்று முறையில் விற்று அரிசி வாங்கி மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. வீடா அல்லது அரிசி மேடா என்று தெரியவில்லை. மிளகு மூட்டைகளும் கடற்கரை ஓரத்தில் கடல் போல பரந்து கிடக்கின்றன. சேர நாட்டில் ஒன்றுக்குமே குறைச்சல் இல்லை.

சேர நாட்டில் பெண்ணைக் கொடுப்பதும் எடுப்பதும் கடினம். முசிறியில் இருக்கும் அளவுக்கு செல்வம் கொடுத்தாலும், மணம் புரிய பெண் கிடைப்பது அரிது.  அதனால் போர் வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார் புலவர் பாணர் புறநாநூற்றில். 


தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை (1902-1981) எழுதிய மதுரைக்குமாரன் என்ற ஆராய்ச்சி நூலில் நிறைய சங்ககாலச் சங்கதிகள் கிடைக்கின்றன. குறிப்பாக, கடல் வழி வியாபாரம் பற்றி. 


கடல் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போதுதானே கலங்கரை விளக்கங்கள் தேவைப்படும்? பிள்ளை ஔவையாரை மேற்கொள் காட்டுகிறார்: கரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாக. 

யார் பண்டைய  தமிழகத்துடன் வணிகம் செய்தனர்? சீனர்கள். யவனர்கள் அல்லது கிரீக் நாட்டவர்கள், ரோமானியர்கள்  (ஐரோப்பா) கடல் வழியாக வந்தவர்கள். 

பிள்ளை அதோடு நிற்கவில்லை. இன்னுமொரு குறிப்பு தருகிறார். வெளிநாடுகளிலிருந்து வரும் கலங்கள் கொண்டு வரும் பொருட்கள் மீதும் வரி வசூலித்தான், அந்நாட்டு அரசன்.


ஐம்பெருங்காப்பியங்கில் ஒன்றான மணிமேகலையிலும்  சீவகசிந்தாமணியிலும் ஏகப்பட்ட வெளிநாட்டு வியாபாரக் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பார்ப்போம் கூடிய சீக்கிரத்தில்.


பண்டகச் சாலைகள் (வேர்ஹவுஸ்) ஒன்றும் புதிது அல்ல.  சங்க காலத்திலேயே பிரபலம். இந்தக்கட்டுரையை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்