சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?
ரமேஷ் குமார் டெல்லியிலிருந்து
ஜெப் பேஸ்ஒஸ் (Jeff Bezos) உலகத்திலேயே பெரிய செல்வந்தர்களில் டாப் மூன்று இடங்களில் அங்கம் வகிப்பவர்.
கொரானா காலத்தில் மட்டும் சம்பாதித்த பணம் பல கோடிகள். இன்று அவருடைய மொத்த சொத்து 180 பில்லியன் அமெரிக்கன் டாலர். (1000 மில்லியன் = 1 பில்லியன். 10 லக்ஷம் = 1 மில்லியன். ஒரு அமெரிக்கன் டாலர் = 75 இந்திய ரூபாய்).
இவருடைய முதல் இடத்துக்கானப் போட்டி இந்தியா வர விரும்பும் எலக்ட்ரிக் கார் உலக நாயகன் இலன் மஸ்க் (Elan Musk) கூட.
நமக்குத் பிரபலமான அமேசான் இவருடைய கம்பெனி. இந்த கம்பெனி பற்றி நிறையப் பேருக்கு ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது. பல நாடுகளில் சென்று அந்நாட்டு சிறு வியாபாரிகளை முழுங்கிவிட்டது இந்த அமெரிக்கன் கம்பெனி. இந்தியாவிலேகூட இந்த குற்றச்சாட்டு உண்டு. வழக்குகள் தொடர்கின்றன இங்கேயும். சமீபத்திய பியூச்சர் கம்பெனி-அமேசான் வழக்கு குறிப்பிடத்தக்கது.
அமேசனைப்பற்றி கடுமையாக விமசரிக்கப்பட்ட புத்தங்கள் ஏராளம் உலக அளவில். சொல்லப்போன, பெயர் ரிப்பேர்.
நல்ல பெயர் எடுக்க அமேசான் முயற்சி செய்வது என்னவோ உண்மை. உதாரணமாக, இங்கிலாந்தில் நடக்கும் ஒரு சம்பவத்தைக் கவனிப்போம்.
டார்லிங்டன் என்று ஒரு ஊர் இங்கிலாந்தில். அமேசான் வருகை பல கடைகள் மூட மூல காரணமாக இருந்தது. அமேசான் ஒரு வில்லனாக கருதப்பட்டது. கோவிட் சமையத்தில் இது ஒரு வர்ஹவுஸ் அல்லது பண்டகச்சாலை நிறுவியது. 1,300 பேருக்கு முழு நேர வேலை வாய்ப்பு. பண்டிகை காலங்களில், 500 கூடுதல் வேலை வாய்ப்பு.
அமேசான்தான், டார்லிங்டனின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு அளிக்கும் கம்பெனி இன்று. சம்பளம்: 10 பவுண்ட் ஸ்டெர்லிங் /1 மணி நேரம் (1 பவுண்ட் ஸ்டெர்லிங் = 101 இந்திய ரூபாய்). இந்த சம்பளம் பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்ணியத்த அளவைவிட அதிகம். கூடவே, 8000 பவுண்ட் ஸ்டெர்லிங் படிப்பு உதவி நான்கு வருட காலத்துக்கு.
டார்லிங்டன் மக்கள் தொகை: ஒரு லக்ஷம். என்னோவோ, அந்த ஊரே அமேசானுக்கு வேலை செய்கிறால் போன்ற தோற்றம். சுமார் 55,000 முழு நேர வேலையாட்கள் இங்கிலாந்தில் அமேசனுக்காக அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
பீட்டர் கிப்சன், அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். கடுமையாக விமரித்து வந்த கிப்சன், அமேசான் வருகையால் வேலை வாய்ப்பு அதிகமாயிருப்பதை வரவேற்கிறார். ஆனாலும், இன்னும் வேண்டும் என்கிறார்!
கிப்சன் மனம் மாறி இருக்கலாம். இன்றும் அமேசான் மீதானக் கோபம் தணியவில்லை. சமீபத்தில் கருப்பு வெள்ளிக் கிழமை தினம் (Black Friday) அனுசரித்தனர் இங்கிலாந்தின் வியாபாரிகள். பல பண்டகச்சசாலைகள் முன் முற்றுகை போராட்டம் இட்டனர்.டார்லிங்டனில் கூட. நாட்டுக்கு நல்லது இல்லை அமேசானால். பொருளாதார வளர்ச்சி, சுற்றுப்புற சீரழிவு ஒரு பெரிய கவலை.அமேசான் சுற்றுப்புற பராமரிப்பு பாதிக்கப்படாது. பொருளாதார வளர்ச்சிகூட ஏதுவாகிறது அதன் சிறு வியாபாரிகளுக்கு ஆன்லைன் வ்யாபாரத்தலம் (market place) மூலம். மேலும், 2021ல் மட்டும் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததாக சொல்கிறது.
அமேசான் ஐரோப்பாவில் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் இங்கிலாந்தில் மட்டும் 50 சதவிகிதம்.ஏனனில், ஜெர்மனியும் இங்கிலாந்தும் அமேசானின் மிகப்பெரிய வியாபரச் சந்தை அமெரிக்காவுக்கு வெளியே.
அதிர்ஷ்டவசமாக, டார்லிங்டன் நகர அதிகாரிகள் அமேசானைப் பாராட்டுகின்றனர். வேலை வாய்ப்பு அதிகமாகியது ஒரு பக்கம். கல்லூரிவிட்டு வெளிவரும் மாணவர்கள், டார்லிங்க்டனை விட்டு வெளியேறுவது குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் நிறைய கடைகள் மூடப்பட்டன. பிரசித்தமான மார்க்ஸ் & ஸ்பென்ஸர் கூட வெளியேறியது.
அமேசான் டார்லிங்டன் நகத்துக்கு கொடுக்கும் வரி: 1.2 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங். ஏகப்பட்ட வருமானம். எனவே, நகர அதிகாரிகள் அமேசான் வருகையை வரவேற்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
அமேசான் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு. டார்லிங்டனில் இருக்கும் அல்லது வர விரும்பும் யாரும் அமேசானை மேட்ச் பண்ண இயலுமா? இது ஒரு பெரியக் கேள்விக் குறி.
அமேசான் ஹீரோவா, வில்லனா?
சிலருக்கு ஹீரோ. சிலருக்கு வில்லன்.
நிஜமாகவே, எல்லாரோயும் திருப்தி செய்ய முயல்வது நா மும்கின் (முடியதாக் காரியம்).

Comments
Post a Comment