சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 


உடம்பு சரியில்லை. காய்ச்சல். ஊசி போட்டுக்க டாக்டர்கிட்ட போனால் நம் குழந்தைகள் அடம்பிடிக்கும். உண்மைதானே? 

அதேமாதிரி, நம் வீட்டில் யாருக்கோ அம்மைப் போட்டிருந்தால், வெளியாருக்கு வீட்டினுள் அனுமதி மறுப்போம். உண்மைதானே? 

இச்செயல்கள் யாவும், எல்லார் நன்மைக்குத்தானே? இது பலருக்கு  புரிய மாட்டேன் என்கிறது.

இந்த கூட்டத்தில், கனடா தேசத்தில் இருக்கும் லாரி டிரைவர்களும் அடக்கம். கனடா தேசம், வட அமெரிக்காவில் உள்ளது. நிறைய இந்தியர்களும் நிரந்தரமாக  வசிக்கின்றனர். நிறைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டிரக் டிரைவர் காலகாலமாக செட்டில் ஆகிவிட்டார்கள்.

கனடாவின் கிழக்கிலிருந்து மேற்கே செல்ல, கடக்க  வேண்டிய தூரம்: 5500 கிலோமீட்டர். ஒப்பீட்டால், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தூரம்: 3500 கிலோமீட்டர். அமெரிக்கா-கனடா போக்குவரத்து அதிகம். கனடா 308 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்கிறது அமெரிக்காவுக்கு. 320 பில்லியன் டாலர் இறக்குமதி அமெரிக்காவிலிருந்து. . ஒட்டுமொத்தமாக, 630 பில்லியன் டாலர் வியாபாரம் நடக்கிறது இந்த இரண்டு நாடுக்கிடையே.



இதில் லாரி கிட்டத்தட்ட 70 சதவிகிதம் உபயோகிக்கப்படுகிறது. இவ்விரண்டு நாடுகளுக்கு இடையே 100க்கும் மேலான செக்போஸ்ட் இருக்கிறது. 

இன்றைய தினம், கன்னடா லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம்: கோவிட்.

ஜனவரி 22 முதல், தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாத டிரைவர் அமெரிக்காவுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. போன வருடம் அக்டொபர் மாதம் முன்னறிக்கை வெளியிடப்பட்டது. கனடா அரசும் அறிவித்தது இந்த நிபந்தனையை. சுமார் 100 நாட்கள் அவகாசம் கனடா டிரைவர்களுக்கு தடுப்பு ஊசி போடாமல் இருந்தால் போட்டுக்கொள்ள. 

ஆனால், கனடா டிரைவர்கள் தயாராக இல்லை போட்டுக்கொள்ள. தடுப்பூசி தயக்கம் எனலாம். கனடா டிரக் சங்கங்கள்கூட அறிவூரை கூறியது கனடா டிரைவர்களுக்கு. சிறு குழந்தையா என்ன இந்த டிரைவர்கள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் ஊசி போட? வீணாக அடம். 

இந்த தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் ஒரு புதிய போராட்டம் துவங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான லாரிகள் ஆமை வேகத்தில் கனடாவின் தலைநகரான ஒட்டாவா நோக்கி நகருகின்றன.


ஏகபட்டப் போக்குவரத்து இடைஞ்சல். லாரி மட்டுமா சாலையில் போகிறது? எல்லா டிரைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக, டிரைவர்களுக்கிடையே ஒரு பிளவு. 

கனடா அல்லது அமெரிக்கா அரசாங்கமோ இந்த தடுப்பூசி ஆணையை விலக்கப் போவதில்லை. கோவிட்டின் கோட்டம் இன்னும் அடங்கவில்லை. ஓமைகிறான் என்ற புது அவதாரத்தில் உலகில் உலா வருகிறது. 

தடுப்பூசிப்போட்டு கொண்டால் 100 சதவிகிதம் பாதுகாப்பு தருமா என்று ஒரு வினா. உலக அளவில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உயிர் நீத்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

கனடா மக்கள்தொகை 3.8 கோடி. இதில் 3.2 கோடி (84%) கனடா வாழ் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போட்டாகிவிட்டது. இரண்டு டோஸ்: 3 கோடி (78%). பூஸ்டர்: 1.3 கோடி (35%). 

தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்கள் அறிவிலிகளா? தடுப்பூசியை எதிர்க்கும் கனடா டிரைவர்கள் யோசிக்க வேண்டும். 

இந்த மாதிரி தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம் கண்டிக்கத்தக்கது. கனடா ஆனாலும் சரி. எங்க இருந்தாலும் சரி. 

உங்கள் கருத்து என்ன, நண்பர்களே? 

வாட்ஸஅப் மூலம் தெரிவியுங்கள். என் வாட்ஸாப் எண்: 9711544181







 


Comments

Popular posts from this blog

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு