கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
ரெடி . ஸ்டெடி. ....
"கோ" ஒன்றுதான் மிச்சம்.
அந்த விசில் எப்போ ஊதப்படும்? நிறைய கண்கள் பார்த்தவண்ணம் இருக்கின்றன.
எங்கே இருந்து கேட்டால் , தமிழ்நாடு, கர்நாடகா, வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலுங்கானா.
இது என்ன ஓட்டப் பந்தயம்?
வேற என்ன.... எலக்ட்ரிக் அல்லது மின்சார கார் தயாரிப்புதான்.
யார் கூட?
உலக எலக்ட்ரிக் கார் நாயகன் டெஸ்லா சொந்தக்காரர் இலன் மஸ்க்.
யாரோ அவரோட ட்விட்டர்லே "இந்தியா வர எதாவது திட்டம் இருக்கானு" கேட்டபோது, மஸ்க் "வருவேன்"னார்.
அதைத் தொடர்ந்து, 2021லே இந்தியாலே ஒரு டெஸ்லா ஆபிஸ் திறக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் கொஞ்சம் குஷி. யார்தான் வரவேற்க மாட்டார்கள் டெஸ்லாவின் வருகையை?
இந்தியாவின் சிகப்பு ஜமுக்காள வரவேற்பை முன்னே வைத்து, மஸ்க் சில சலுகைகள் பட்டியல் போட்டார். வரி சம்பந்தப்பட்டவை அவை. முழு எலக்ட்ரிக் காரையும் இந்தியாலே தயாரிக்க முடியாது. சில பாகங்கள் ஒகே என்று சிக்னல் காட்டப்பட்டது அமெரிக்காவிலிருந்து.
ஒரு டெஸ்லா காரை இறக்குமதி செய்தால், அதன் விலை இரட்டிப்பாகிறது. 34 லக்ஷ ரூபாய் டெஸ்லா விலை 68 லக்ஷம். ரொம்ப விலை அதிகம். 100% இறக்குமதி சுங்க வரிதான் காரணம். இதை குறைக்க மஸ்க் கோரிக்கை. அப்படியே 50% குறைத்தாலும், மஸ்க்கின் டெஸ்லா விலை 40 லக்ஷம் மேலதான் இருக்கும். இந்தியாவில் தயாரிப்படும் எலக்ட்ரிக் கார் 40 லக்ஷத்தை தாண்ட வில்லை . எனவே, இந்தியா கார் கம்பனிகள் பாதிக்கப்படாது என்பது மஸ்க் வாதம்.
இதற்கிடையில், இந்தியா கார் தயாரிப்பார்களுக்கு ஜுரம் வந்து விட்டது. ஏற்கனேவே ஏகப்பட்ட கடுமையான வியாபார போட்டி. மஸ்கின் நுழைவு மேலும் போட்டியை கடுமையாக்கும். பரப்புரை (lobby) செய்யப்பட்டது இந்தியா கார் கம்பெனிகள் பக்கமிருந்து.
இது ஒன்றும் புதுசு இல்லை. 1991லே பம்பாய் கிளப் முயற்சி ஞாபகம் இருக்கிறதா? பஜாஜ் ஸ்கூட்டர் ராகுல் பஜாஜ் உட்பட நிறைய இந்திய முதலாளிகள் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கை (liberalization policy) கூடாது என்று கூப்பாடு போடவில்லையா?அதே மாதிரிதான் 2021லேயும் கார் தயாரிப்பார்கள் சத்தம் போடுகிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும், எலக்ட்ரிக் வண்டியின் வருகையைத் தடுக்க இயலாது என்று. காரணம்: கார்பன் உமிழ்வு இலக்கு. மிஞ்சிப்போனால், கொஞ்சம் தாமதிக்க முடியும்.
மஸ்க்கின் இந்தியா ஆர்வம் வரவேற்கத் தக்கது. புது தொழிற்சாலைகள் தொடங்கும். வேலைவாய்ப்புக்கள் அதிகமாகும். செய்யும் பொரூட்கள் விற்பதன் மூலம் அரசாங்கத்துக்கு வரி வசூல் உண்டாகும். தொழில் வளர்ச்சி தேவையானது.
அதனால்தான், சில அரசுகள் களத்தில் குதித்தன. தமிழ்நாடு, இந்தியாவின் டெட்ராய்ட் என்பார்கள். அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரம் கார் தயாரிப்புக்கு பெயர் போனது. மகாராஷ்டிராகூட அதே இடத்தில்தான். தெலுங்கானா ஒரு முற்போக்கு அரசு. பஞ்சாப்பும் அந்த பட்டியலில். வங்காளம் யோசிக்க வேண்டிய விஷயம்.
டாடாவின் நானோ தயாரிப்புக்கு முதலில் தேர்ந்து எடுக்கப்பட்ட நந்திக்ராம் வங்காளத்தில் தான். ஆனால், தற்போதைய முதல் அமைச்சர் மம்தா பானெர்ஜி அப்போது அதை எதிர்த்தார், கம்யூனிஸ்ட் காட்சிகள் ஆட்சி புரிந்தபோது. அச்சமயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உடனுக்குடன் சனந் என்ற இடத்தில் டாட்டாவுக்கு இடம் கொடுத்தார். இன்று அதே மோடி இந்தியாவின் பிரதமர்.குஜராத் இந்த பந்தயத்தில் இருக்கிறதா என்றால், இப்போதைக்கு இல்லை. அதற்கு அர்த்தம், குஜரத்க்கு விருப்பம் இல்லை என்று பொருள் இல்லை. புஞ்சாபும் வங்காளமும் out of race, கிட்டத்தட்ட. கர்நாடகா தன்னை எலக்ட்ரிக் வண்டிகளின் தளம் என்று மார்க்கெட்டிங் செய்கிறது. தமிழ்நாடு எலக்ட்ரிக் வண்டிகளின் தலைநகர் என்கிறது. எல்லா அரசுகளும் மஸ்கா போடுகிறார்கள். தவறு இல்லை. காரியம் கைகூட வேண்டூம் என்ற விருப்பம்.
அதெல்லாம் சரி. மஸ்க் பெரிய சாமர்த்திய பிஜின்ஸ்மேன். சீனாவிடமிருந்து நிறைய சலுகைகள் பெற்று ஒரு பெரிய எலக்ட்ரிக் கார் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். ஜெர்மனியில் கூட பெரிய தொழிற்சாலை கட்டி இருக்கிறார். சிம்பிள் லாஜிக்: எங்கே அதிகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறதோ, அங்கேதான் தொடங்குவார். மஸ்க் மட்டுமல்ல. யாருமே அதைத்தான் கடைப்பிடிப்பார்.
இரண்டாவது, மத்திய அரசாங்கத்தின் நிபந்தனைகள். அவர்கள் கேட்பது: மஸ்க், சொல்லுங்கள் நீங்கள் எத்தனை முதலீடு கொண்டு வர திட்டம்? எத்தனை சதவிகிதம் இந்திய உதிரிப்பகுதிகளை பயன்படுத்துவீர்கள்? எத்தனை சீக்கிரம்?
மாஸ்க் கிலாடித்தனமாக, ஜனவரி 13ன் தேதி ஒரு ட்வீட் பெற்றார் அவர் சில சவால்களை சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று. பெப்ரவரிலே பட்ஜெட். எதாவது வரிச் சலுகைகள் கிடைக்குமா என்று ஒரு நப்பாசை. யார் கண்டது? கிடைத்தாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.ஒன்று மற்றும் நிச்சயம். டெஸ்லாவின் இந்திய வருகைதான் அது.
இது "வந்தா வச்சுங்க. வரா காட்டி விட்டுடுங்க" கதை இல்லை. சீனா வேணும்தான் அமெரிக்கா டெஸ்லாவை எல்லா சலுகைகளும் கொடுத்து அனுமதித்து இருக்கிறது. டெஸ்லாவின் வருகை சீனக் கம்பனிகளின் போட்டித் திறமையை அதிகமாகும் என்பதுதான் சீனா அதிபர் சி பெங்கின் எண்ணம். வரவேற்க தக்கது. மோடி அரசாங்கம் பின்பற்றுமா?
செய்யக்கூடும் என்று தோன்றுகிறது. 50 வருஷம் முன்பு, இந்தியாவிலே அம்பாசடர், பியட் கார்கள் மட்டும்தான் இருந்தது. இந்திரா காந்தி 1984ல் சுஸுகியை (Suzuki) இந்தியாவில் வர விட்டார். இன்று, அம்பாசடர், பியட் போன இடம் தெரிய வில்லை. ஆனால், பலவிதமான கார்கள் இந்தியாவில் ஓடுகின்றன. எண்ணிக்கையும் அதிகம். வேலை வாய்ப்பும் அதிகம்.
அதே மாதிரி வளர்ச்சி டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் வருகை ஏற்படுத்தக்கூடும். ஒரு போட்டி உருவாகும்: யார் முதல் மூன்று இடங்களைபப்பிடிப்பதுவென்று. தேவையான பந்தயம்தான். ரெடி?

Comments
Post a Comment