சரக்குச் சங்கிலி-3: மிலிட்டரி லாஜிஸ்டிக்ஸ்-1




ரமேஷ் குமார் டில்லியிருந்து... 


புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர் 

பாடினான் கண்ணதாசன், சிவாஜி கணேசன் நடித்த ரத்தத்திலகம் படத்திலே. 

சண்டை போடாத அரசன் இல்லை. பூச்சூடாத அரசி இல்லை. 

போர் ஒரு யதார்த்தமான நிகழ்வு. ராமாயணம். மஹாபாரதம். முதல் சிலுவைப் போர். இரண்டாவது சிலுவைப் போர். நபிகள் நாயகத்தின் பத்ர் போர். காலம் காலமாக நடக்கும் வழக்கமான அம்சம். 

சண்டைனா, கத்தி, கேடயம், குதிரை, யானை, வீரர்கள். அந்த காலத்தில். நவீன உலகில், தாங்கிகள், பீரங்கிகள் , ஏவுக்கணைகள் , ... ஏகப்பட்ட விஷயங்கள். எத்தனை நாள் சண்டை நடக்கும் என்று தெரியாது. 

சண்டை நடக்கும் இடமெல்லாம் உறைய வசதி. உண்ண வசதி. மருத்துவம். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எல்லா தேவைகளும் பூர்த்திச் செய்ய ஏற்பாடுகள். ஓண்ணு ரெண்டு பேர் இல்லை. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கை. பெரிய பொறுப்பு. 

இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு யாரோடது தெரியுமா? 

லாஜிஸ்டிக்ஸ் பிரிவு. இந்த வார்த்தையின் மூலாதாரம் ராணுவம். சரியான நேரத்திலே தேவையான கருவிகளோ சாமான்களோ கிடைக்காவிட்டால், போரின் முடிவு சாதகமாக இருக்காது. எனவே, லாஜிஸ்டிக்ஸ் மிகவும் முக்யத்வம் வாய்ந்தது. 

போர் செய்ய முடிவு முன்பு, ஆயத்தனங்கள்  செய்ய வேண்டும். கடிமான காரியம். யோசித்து பாருங்கள்...

போன் அல்லது விமானம் அல்லது டிரக் இல்லாத காலத்தில், எப்படி திட்டமிட்டனர்? 

கிறிஸ்து பிறப்பதுக்கு முன் 218 (218 BC) ஹன்னிபால் பார்கா யானை, குதிரை படையுடன் ஆல்ப்ஸ் மலை வழியாகப் போய்  ரோம சாம்ராஜ்யத்தை தாக்கினான். 

பக்கத்துக்கு பக்கத்துக்கு நாடுகள் அல்ல - இந்தியா பாக்கிஸ்தான் போல இல்லை. பல ஆயிரக்கணக்கான மைல் சென்று சண்டை இட்டான்.
 
உலகச் சரித்தரித்தில், பிரசித்திப்பெற்ற லாஜிஸ்டிக்ஸ் வல்லுநர்களை ஒரு அட்டவணைப் படுத்தினால், கார்த்தனேஜிங் போர் தலைவன் ஹன்னிபால் பார்கா கட்டாயமாக இருப்பார். (கார்த்தனேஜியா = இன்றைய துனிசியா, மத்தியதரைக் கடல் பகுதியில், வடக்கு ஆப்பிரிக்கா நாடு).

இந்த போருக்கு அவன் கூட்டிச் சென்ற பரிவாரம் பற்றிய செய்திகள் மயிர் சிலிர்க்க வைக்கும். பார்ப்போமா? 

ஹன்னிபாலின் சைன்யத்தின் அளவு என்ன? யார் இந்த யுத்தத்தில் பங்கு ஏற்றனர்? 


மீண்டும் சந்திப்போம் விரைவில்.


சரக்குச் சங்கலி-1: ஒரு அறிமுகம் படிக்க இந்த ணைப்பை கிளிக் செய்யவும் 

சரக்குச் சங்கிலி-2: சங்க காலப் பண்டகச் சாலைகள் 

 படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 




Comments

Popular posts from this blog

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்