சரக்குச் சங்கிலி-1: ஒரு அறிமுகம்
ரமேஷ் டில்லியிருந்து
இது என்ன பெயருன்னு யோசிக்கிறீங்களா?
ஆங்கிலத்திலே சப்ளை செயின் (Supply Chain) சொல்றதோட தமிழாக்கம்.
இந்த Covid வந்தாலும் வந்தது, இப்போ சப்ளை செயின் என்கிற வார்த்தை ரொம்ப சகஜம்.
பிரதமரும் அடிக்கடி சொல்றர் இந்த வார்த்தையை. சந்து முனையிலே இருக்கிற மளிகைக்கடைக்காரரும் சொல்றர். அத்தனை பிரசித்தம்.
சொல்லப்போனா, இந்த சரக்குச் சங்கிலி நம் வாழ்க்கையோட பிணைந்தது.
கடைக்கு சாமான் வாங்கப்போன, சில நேரங்களில் ஸ்டாக் இல்லை (Out of Stock) நம்ம கேட்ட பொருளுக்குன்னு சொல்லுவாங்க. ஏன்?
ஏகப்பட்ட காரணம் இருக்கும்: ஒன்னு, உற்பத்தி குறைச்சல். இன்னொன்னு, ஐட்டம் ரெடி. ஆனால், சரக்கு அனுப்ப வண்டி இல்லை.
இன்னும் கொஞ்சம், ஆராய்வோம்.
ஏன் உற்பத்தி குறைச்சல்?
அந்த ஐட்டம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் (Raw Materials) தட்டுப்பாடு. உதாரணத்துக்கு, கார் (car) எடுத்துப்போம்.
தெரியுமா உங்களுக்கு,ஒரு காருக்குள் சுமார் 2000 உதிரி பொருட்கள் இருக்குன்னு?மாருதியோ, ஹ்யுண்டையோ, ஒரு காரை 100% தயாரிப்பது இல்லை.
என்ஜின், மற்றும் ஒரு சில பாகங்கள் தவிர, மற்ற எல்லா ஐட்டங்களும் மற்றவர்களிடமிருந்து வாங்கி அசெம்பிள் செய்கிறார்கள்.
இதுக்கு பெயர்தான் அவுட்சோர்சிங் (outsourcing).
கார் மட்டுமில்லே. நிறைய பொருட்கள் இந்த முறையில்தான் தயாரிக்கப்படுகிறது.
எனவே, இந்த மாதிரி மாடல்லே ஒரு பொருளைத் தயாரிக்கும்போது, ஏதாவது ஒரு ஐட்டம் இல்லேனோக்க்கூட, ப்ராப்ளம்தான். ஒரு முழுப்பொருள் கிடைக்காது. அப்போ, காரை விற்க முடியாது. So, வியாபாரம் டல்.
இதுதான் சப்ளை செயின் டிஸ்ரப்ஷன் (Supply Chain Disruption) அல்லது சரக்குச் சங்கிலி இடையூறு.
வியாபாரம் படுத்தா, அதனால் பாதிக்கப்படறது, அந்த கம்பனிலே வேலை செய்றவங்க மட்டும் இல்லை. பல லக்ஷக்கணக்கானவர்கள் கஷ்டப்பட நேரிடும். எப்பிடுன்னு கேட்கலாம்.
இந்த அவுட்சோர்சிங் மாடலால், எல்லா சப்ளையர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒட்டு மொத்தமாக, நிறைய எதிர்மறை விளைவுகள் (negative impact).
2,000லே ஒரு சின்ன ஐட்டம் தட்டுப்பாடுன்னாக்கூட, எல்லாருக்கும் சிரமம். நாட்டின் GDP அல்லது செல்வ வளர்ச்சி கீழ் நோக்கிப்பாயும்.
இப்போ புரிஞ்சுதா இந்த சரக்குச் சங்கிலி இணைப்பு?
மீண்டும் சந்திப்போம், சீக்கிரம்.

Comments
Post a Comment