கிருபானந்த வாரியாரும் கந்த புராணமும்-1
முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். பதினொன்னான் கிளாஸ்லே படிச்சது ஞாகபம் வந்ததது.
மலையும் மலையைச்சார்ந்த இடமும் முருக வழிபாடு ஸ்தலம் என சொல்லப்பட்டது. பழனி. சுவாமி மலை. திருப்பரங்குன்றம். திருத்தணி. always something to do with மலை அல்லது குன்று.
அதனால்தான் என்னவோ, திருப்பதிகூட முருகர் ஸ்தலம்தான், வெங்கடேச பெருமால் இல்லைன்னு ஒரு கருத்து.
சமீபத்திலே, இவரோட கந்த புராணம் சொற்பொழிவு YOUTUBEலே கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.
தமிழ் தவிர சமஸ்க்ரிதம் கூட அத்துப்படி. பாட்டு plus கதை. மன்மதனை சிவன் சாம்பலாக்குகிறார். காரணம்: மன்மதன் காதல் உணர்வை சிவனிடம் பார்வதியின்பால் தூண்ட முனைகிறான். விளைவு: மரணம்.
ரதி, மன்மதன் மனைவி, அழுதுகொண்டே சிவனின் சொல்கிறாள்: "ஒரு பெண்ணுக்கு நான்கு ரோல். குழந்தை/கன்னி. சகோதரி. மனைவி. தாய்.
யாரை வேண்டுமானாலும் அவள் சகோதரனாகவோ சகோதரியாகவோ தனியாகவோ தந்தையாகவோ பாவிக்க இயலும் . ஆனால், ஒரே ஒருவனை மட்டுமே கணவனாக பார்க்க முடியும். இப்போது, சிவ பெருமானே, நீங்கள் என் கணவனை எரித்து விட்டீர். உடம்பு கூட இல்லை, தொட்டு கதறி அழ!"
இந்த மாதிரி நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் . கிருபானந்த வாரியார் சொல்ல கேட்கணும். Fabulous. என்னோட பாட்டி வீனஸ் காலனி (ஆழவார்பேட்டை) கதாகாலக்ஷேபத்துக்கு கூட்டிண்டு போயிருக்க. அனந்தராம தீக்ஷிதர். கிருபானந்த வாரியார் உபன்யாசங்கங்கள் கேட்ருக்கேன்.
1960-1970லே டிவி கிடையாது. Entertainment ரொம்ப குறைச்சல். கதாகாலக்ஷேபம் ரொம்ப பாப்புலர் .
கிருபானந்த வாரியார் ஒரு பெரிய பொக்கிஷம்.
Comments
Post a Comment