முருக நீ வர வேண்டும்

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்

தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.


- கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர் 





கடந்த ஒரு வார காலமாக, முருகன் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் நிறைய வெளிப்படுகிறது. 

எதேச்சையாக திருமுருகாற்றுப்படை இந்த புது பயணத்தை தொடங்கியது. YOUTUBE லே ஆரூர் Sundaraman மயிலாப்பூர் கபாலி கோயிலில் நடத்திய ஒரு மணி நேர சொற்பொழிவு கேட்க நேரிட்டது. இந்த நூல் சங்க காலத்து இலக்கியம் என்ற உண்மை தெரியவந்தது.

கீ வா ஜா எழுதிய விளக்கவுரையும் கிடைத்தது. இன்னொரு YOUTUBE விளக்கவுரையும் கேட்டபோது, பள்ளிநாட்கள் ஞாபகம் வந்ததது. குறிஞ்சி, முல்லை, etc . கீ வா ஜா அவர் ஆசிரயராக பணியாற்றிய கலைமகள் ஆபீஸ் ஞாபகம் ஆயிற்று. அந்த ஆபீஸ் ஐ தாண்டித்தானே தினம் பள்ளி சென்றது. 

கலைமகள் ஆபீஸ் இப்போது ஹௌசிங் complex ஆயிடுது. நண்பர் ஷாந்தி அதில்தான் இருக்கிறாள். மீனு மாமி சுசிலா மாமி ஞாபகம் வந்தது. மீனு மாமி தவறி போயிட்ட சில வருடங்களுக்கு முன். அடுத்த முறை சென்னை போகும் பொது சுஷீலா மாமி ஐ கட்டாயம் பார்க்கணும். 

திருமுருகாற்றுப்படைக்கு பிறகு, கந்தர் அனுபூதி சூலமங்கலம் சகோதரிகள் பாட, கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. எவ்வளுவு வருஷம் பிறகு ஞாபகம் இல்லை. திருமுருகாற்றுப்படைஐ விட கந்தர் அனுபூதி படிக்க ஈஸியா இருக்கு. சாதாரண பேசு தமிழ். 

ரொம்ப நாளைக்கு திருமுருகாற்றுப்படை meant சீர்காழி கோவிந்தராஜன் பாடல் (தேவரின் துணைவன் ) தான் நினைவு. 

"திருமுருகாற்றுப்படை தனிலே வரும் முருக, ஆறுபடை வீடு கொண்ட திரு முருக" 

ஸ்ரீதேவி  முருகரா நடிச்சப்படம். 

நக்கீரர் எழுதியது திருமுருகாற்றுப்படை நக்கீரர் meant திருவிளையால் தருமி scene  for long. 




Comments

Popular posts from this blog

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்