புதுப் பயணம்
வருஷம் 2022 ஆரம்பிச்சப்போது, ஒரு புது வகையான பயணம் செய்ய ஆசை வந்தது.
அதாவது, தமிழில் பதிவு செய்யனும்.
இரண்டாவது, நமது இலக்கியங்களைப் படிக்கணும்.
படிக்கிறதைவிட, கேட்டலே (listening) சுலபம்னு தோணித்து.
கற்றலின் கேட்டலே நன்று! Right?
YOUTUBEலே நிறைய பதிவுகள் இருக்கு.
தினம் கார்த்தாலே 10 கிலோமீட்டர் நடக்கிறதே, பாட்டு கேக்கிறதுப் பதிலா, இந்த YOUTUBE பதிவுகளை கேட்க ஆரம்பித்தேன்.
கடந்த பத்து நாளாக, திருமூலர் திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் கேட்கிறேன்.
சங்க கால இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களான்னு கேள்வி எழும்பியிருக்கிறது.
இன்னொரு கிளைப்பயன்: தமிழ் இலக்கண revision ...
தாலாட்டு . கிருபானந்த வாரியார் விளக்கம் ... தால் = நாக்கு. ஆட்டுதல் ... நாக்கை ஆட்டி பாடுவது, தாலாட்டு.
தமிழ் பழமொழி...
அடி உதவதுப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
நம் புரிந்துக்கொண்டது ஒன்று. அதன் உண்மை அர்த்தம்:
"திருவடிகள் உதவதுப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்." திருவடிகள் = இறைவன் மலர் பாதங்கள் !!!
டாக்டர் சுதா சேஷய்யனின் திருமந்திரம் சொற்பொழிவில் தெரிந்துக்கொண்டது.
பிரதமை ... எப்படி இந்த பெயர் வந்தது?
பார் தீமை.
எந்த கார்யம் இந்த தினத்தில் ஆரம்பித்தால் அது தீமையில்தான் முடியும்.
மீண்டும், டாக்டர் சுதா சேஷய்யன். கந்த புராணம் சொற்பொழிவு.
வைர முத்து கூட திருமூலர் திருமந்திரம் பற்றி பேசி இருக்கார். கேட்கணும்.
ரமணன்னு சொன்னா, இத்தனை நாள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவிஞர் கண்ணதாசன் பற்றிய ராமணந்தான் ஞாபகத்துக்கு வரும். அவர்கூட திருமூலர் பற்றி பலப்பதிவுகள் போட்டு இருக்கார். Just started listening to him.
ஒவ்வொத்தருக்கும் வேற வேற பாணி.
No two persons approach the subject in the same fashion.
நிஜமாகவே இது ஒரு புதுப் பயணம் எனக்கு. Not external on highways. But internal.
Comments
Post a Comment