சரக்குச் சங்கிலி-4: இந்தியாவின் பொருளாதார பல்ஸ்
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
ஓமைக்ரான் . மூன்றாவது அலை கோவிட் தொற்று நோய் ஒருபக்கம். லொகேஷனல் லோக்கடவுன் அல்லது இருப்பிட பூட்டுதல். கோவிட் அளவுக்குக் கொடூரமா என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஓமிக்கிறான் எப்ப ஒழியுமுன்னு தெரியலை. கவலைதான்.
இன்னொருபக்கம், சில நல்ல செய்திகளும் வரது. என்ன நல்ல செய்தி?
ஏற்றுமதி வியாபாரம் ஏக் தம் சூப்பர். 300 பில்லியன் அமெரிக்க டாலர் (ஒரு அமெரிக்கா டாலரின் மதிப்பு 74 ரூபாய்) தொட்டு இருக்கு கடந்த ஏப்ரலென்று டிசம்பர் 2021 வரைக்கும்.போன வாரம், ஒரு அரசாங்க அறிக்கை வெளியிட்ட தகவல்: நடக்கும் நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 9.2 சதவிகிதம் இருக்கும் என எதிர்ப்பார்க்க்கப்படுகிறது. வேறு சில பொருளாதார பண்டிதர்களும் 9 சதவிகித கணக்கை ஒத்துக்கொள்கிறார்கள். இன்றைய தேதியில், இந்தியாவின் ஜிடிபி (GDP) 3 டிரில்லியன் அமெரிக்கா டாலரை (1,000 பில்லியன் = 1 டிரில்லியன்) தாண்டி விட்டது. உலக அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாராட்டத்தக்கது.
டிசம்பர் 2021ல் ஏற்றுமதி அதிகம் (37.81 பில்லியன் அமெரிக்க டாலர்). ஒகே. இறக்குமதியும் அதிகம் (59.48 பில்லியன் அமெரிக்கா டாலர்). வணிக பற்றாக்குறை - 21.68 பில்லியன் அமெரிக்கா டாலர். நடக்கும் நிதி ஆண்டில் ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் வரை, மொத்த இறக்குமதி 443.82 பில்லியன் அமெரிக்கா டாலர். ஏற்றுமதி 301.38 பில்லியன் அமெரிக்கா டாலர். வர்த்தக குறைபாடு 142.44 பில்லியன் அமெரிக்கா டாலர்.
FIEO தலைவர் சக்திவேல் என்ன சொல்கிறார்? "நல்ல செய்திதான். அடுத்த நிதி ஆண்டில் (ஏப்ரல் 2022-மார்ச் 2023), நம்ம ஏற்றுமதி 500 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி விடும்னு நம்பறேன்," என்கிறார் நம்ப திருப்பூர்காரர்.
பண வீக்கம் (inflation) ஒரு பலவீனம். ரிசர்வ் பேங்க் பணவியல் கொள்கையின் மூலம், நாட்டின் வளர்ச்சியை நிர்வகிக்கிறது. ஆனாலும், மத்திய அரசாங்கம் நிதி கொள்கையின் உள்ளீடு அல்லது இன்வோல்வ்மென்ட் அதிகம் தேவை. பணவீக்கம் 5.3 சதவிகிதம் இப்போது. அதாவது, போன வ்ருஷத்தைக் காட்டிலும், இந்த வருஷம் நாம எல்லா விஷயத்துக்கும் சராசரிய 5 சதவிகிதம் அதிகம் தர வேண்டி இருக்கிறது. For the same amount. விலைவாசி அதிகமாயிடுது.
கோவிட் பிளஸ் ஓமிக்கிறான் உலகத்துக்கே ஒரு சவாலா போச்சு. இது ஒரு மனிதனின் உடம்பு சம்பந்தப்பட்ட நோய் மட்டும் இல்லை. உலக நாடுகளின் உயிருக்கே உலை வைத்து விட்டது. அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா வரை எல்லோருக்கும் பலத்த காயம்.
பிடிபட்ட நோயில் இருந்து குணமாகி வர ஒவ்வொரு நாட்டுக்கும் நேரம் தேவை. எல்லோருக்கும் வேற வேற நேரம். சில நாடுகள் சீக்கிரம் குணமாகலாம். சில நாடுகள் கொஞ்சம் தாமதமாக. மீட்பு யார் கையில் இருக்கு? நம்மகிட்ட இருக்கு. நம்மக்கிட்டனா, எல்லோர் கிட்டேயும்.
2020 மார்ச் மாசம் லாக் டௌன் ஆன மாதிரி இல்லை இப்போ.
100% சீல் ஆகியிருந்தது அப்போ. ஒரு காரியமும் நடக்கலை. தொழிற்சாலை, ஆபிஸ் மூடல். ரயில், பஸ், விமான போக்குவரத்து ஸிரோ. கடைகள், ஹோட்டல், சினிமா தேட்டர் பந்த். நாம எல்லோரும் அடைப்பட்டுக் கிடந்தோம் நான்கு சுவர்களுக்குள் . வாரக் கண்ணக்கில். மாதக் கணக்கில்.
2022 ஜனவரி. சில நகரங்களில் - கவனிக்கவும், நகரங்களில். நாடு முழுவதும் இல்லை - ஒமைக்ரான் வரவால் அடைப்பு. சிரமம்தான். உடம்பு முழுவதும் ஏகப்பட்ட அடி , காயம். கை அல்லது காலில் மட்டும் எலும்பு முறிவு. இது இரண்டுக்கும் வித்யாசம் இருக்கிறதா இல்லையா? அதே மாதிரிதான்.
பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை ஆசிரியர் நைனன் ஜனவரி 15, 2022ல் எழுதுகிறார்:
நடப்பு நிதி ஆண்டில் ரிசர்வ் பேங்க் சுமார் 2600 பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கலின் நிகர லாபத்தை சர்வே செய்து பார்த்தபோது, இந்த நிறுவனங்கள் முந்திய நிதி ஆண்டில் சம்பாதித்த நிகர லாபத்தை 21-22ன் முதல் ஆறு மாதங்களிலேயே 80% ஈட்டி விட்டன. அடுத்த ஆறு மாதங்களில் (அக்டோபர் 2021-மார்ச் 2022), ரொம்ப குறைவாக வியாபாரம் செய்து நிகர லாபம் பெற்றாலும், ஒட்டு மொத்தமாக, அவை 60% அதிக வளர்ச்சி காண்பிக்கும் வருட கடைசியில்.
இந்த ரிசர்வ் பேங்க் சர்வே 2600 கம்பெனி பற்றியது. ஒரு குறிகிய எண்ணிக்கை. முழு இந்தியாவின் நிறுவனங்களில் வியாபாரத்தை எண்ணிக்கையில் சேர்த்தால், அது ஒரு பெரிய நம்பக இருக்கும் என்றால், அது மிகை ஆகாது.
நைனன் , மோடி பக்தர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து ஒரு பாலன்ஸ்ட் அபிப்ராயம் தருபவர். சீரான பார்வை. பக்க பக்ஷம் குறைச்சல். Rare breed.
2022 ஒரு புது ஆண்டு. பிப்ரவரி முதல் வாரத்தில் 2022-23க்காண பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். வழக்கப்படி, நாங்க இது பண்ணினோம், நாங்க அது பண்ணிணோம்ன்னு ஆளும் கட்சி சொல்வது சகஜம். எதிர்க்கட்சிகள் குய்யோ முறையோன்னு கூச்சல் போடுவதும் சகஜம். அதிலே ஒன்றும் மாற்றம் இரூக்கப் போவது இல்லை.
ஆனால், ஒரு சங்கதி நிச்சியம். உலகம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அப்படி மாறவில்லை என்றால், இது தருணம். எப்போ கோவிட் வந்ததோ, அப்பவே ஒரு எலக்ட்ரிக் ஷாக் தரப்பட்டது. திரும்பிப் பார்த்தால் தெரியும், எந்த அளவுக்கு நம் தனி மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
வர்க் பிரம் ஹோம் (Work From Home). வீட்டிலிருந்தே வேலை செய்வது. வீட்டு சாப்பாடு. படிப்பு - LKG லே இருந்து எல்லாம் - ஆன்லைன். பரிச்சைக் கூட. ஊர் சுற்றுதல் ஸ்டாப். வீடே உலகம். இல்லை சிறையா? நினைத்து பார்த்து இருப்போமா? ஆனால் நடந்தது.
அட்ஜஸ்ட்மென்ட் நிறைய பண்ணிக் கொண்டோம். ரீசெட் பட்டனை அழுத்தினோம். வேற வழியே இல்லை. மாற்றம் ஒன்றுதான் சாஸ்வாதம். நிச்சயமானது. கால மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சார்லஸ் டார்வின் சொன்னது போல், தக்கன பிழைத்து வாழ்தல் (survival of the fittest).
கடைசியாக ஒரு விஷயம். ட்ரான்ஸ்போர்ட்க்காரர்களுக்கு ...
நிஜம், நீங்க கட்டாயமா எந்த நாட்டுக்குமொரு முதுகு எலும்பு. அதிலே ஒரு சந்தேகமும் இல்லை.சக்திவேல் சொல்கிறார் அடுத்த வருஷம் 500 பில்லியன் டாலர் ஏற்றுமதி அனுமானம். அதாவது உறுதியான அல்லது tangible வஸ்துக்கள் வெளிநாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்ப வேண்டும். ஏற்றுமதியாளர்கள் அவர்களுடைய தலையில் சும்மாடு போட்டு தூக்கி போக போவது இல்லை. வண்டி வேண்டும் அவர்களுக்கு.
எனவே, உங்கள் உதவி ஜரூரத்.
அதே மாதிரி, இறக்குமதியும் ஏற்றுமதியைவிட அதிகம். துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலைக்கு அல்லது வேர்ஹவுஸ் போக, வண்டி தேவை. அதற்கு, உங்கள் சேவை தேவை.
அது ஏற்றுமதி-இறக்குமதி பக்கம். வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்திச்செய்ய. நம்ம நாட்டுலே இருக்கிற 130 கோடி மக்களுடைய தேவைகளை பூர்த்திச்செய வண்டி வேண்டாமா?
எனவே, கூப்பாடு போடுவதை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக்கொண்டு, மேற்கொண்டு வளர்ச்சிக்கானப் பாதையை தேடுங்கள்.
வளர்ச்சி யாருக்காகவும் தாமதித்து நிற்க போவதில்லை. அது ஒரு நொடியும் நிற்காமல் ஓடும் வண்டி. சில நேரம், வேகமாக பயணிக்கும். சில நேரம், கொஞ்சம் ஸ்லோவாக செல்லும். சில நேரங்களில் நிற்கும் பல காரணங்களுக்காக.
சாமர்த்தியசாலிகள் ஓடும் வண்டியில் தொத்திக்கொண்டாவது ஊர் போவார்கள்.
ரிஸ்கி? கட்டாயமாக.
வாழ்க்கையே ஒரு புதிர். ஒரு ரிஸ்க் கூட. உங்களுக்கே தெரியும்.
வண்டியை தவற விடாதீர்கள்.

Comments
Post a Comment