பாட்டு பாடவா, பாட்டு எழுதவா?
பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்லுவோம் தமிழிலே.
அந்த மாதிரி ஒரு அனுபவமாச்சு சமீபத்திலே.
நான் தேடினது ஒன்னு, கிடைச்சுது இன்னொன்னு. ரொம்ப சந்தோஷமான அனுபவம்.
பிலிம் song எப்படி கம்போஸ் பண்றங்கன்னு தெரிஞ்சிக்க ஆசை. YouTube ஏகப்பட்ட சாய்ஸ் கொடுக்கிறது.
அதே மாதிரி, பிலிம் song எப்படி எழுதப்படுகிறதுன்னு தெரிஞ்சிக்க ஆசை. ஜேம்ஸ் வசந்தன் மாட்டினார். போன வருஷம், ஒரு workshop ஏற்பாடு செஞ்சு இருந்தார். ஒரு மணி நேர ப்ரோக்ராம்.
நான் பார்க்க, இல்லை கேட்க போனது பாட்டு எப்படி எழுதப்படுகிறதுன்னு தெரிஞ்சிக்க.
ஆனால், வெளியே வந்தபோது, நான் ஏதோ ஒரு தமிழ் இலக்கண வகுப்புக்கு போயிட்டு வந்த ஒரு உணர்ச்சி. ரொம்ப சந்தோசமா இருந்தது.
நெடில், குறில், உயிர் எழுத்து, உயிர்மெய் எழுத்து, எதுகை, மோனை, தன்மை, முன்னிலை, படர்க்கை.
ஒரு பாட்டு எழுத இத்தனை இலக்கண அறிவு தேவையா? ஆச்சரியமா இருந்தது.
படிக்கிறதே, தமிழ் இலக்கணம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. SSLC எக்ஸாமில் ரொம்ப குறச்ச மார்க் தமிழிலேதான். தாய்மொழி தமிழ். அந்த பயத்திலேயே, PUC, Degreeலே சமஸ்க்ரிதம் படிச்சேன். ஏன்னா, தமிழ் இலக்கண பயம்!
ரொம்ப பிடிச்ச தமிழ் இலக்கண உறுப்பு வினைத்தொகை மட்டும்தான். ஏன்னா , ஊறுகாய் உதாரணம் . ஊறிய காய், ஊருகின்ற காய், ஊறும் காய்!!!
வசந்தனோட சினிமா பாட்டு கம்போசிங் நான் கேட்டது இல்லை . டிவி anchor ஆகத்தான் தெரியும். அவரது கருத்து பரிமாற்றங்கள் இந்த ஒர்க்கஷாப்லே ரொம்ப விஷயம் தெரிந்த வல்லுநர் பேசற மாறி இருந்தது.
பாடல் எழுதுவது பற்றி பேசறதே, இளையராஜா சொன்னது ஞாபகம் வந்தது. ஆயிரம் மலர்களே பாட்டுக்கு ராஜா tune சொன்ன அடுத்த சில நிமஷத்திலே, கண்ணதாசன் வரிகள் சொன்னது நிழல் ஆடியது. நிஜமாகவே கவிஞர் ஒரு கடவுள் தந்த ஒரு வரம் தமிழ் பட உலகுக்கு.
Comments
Post a Comment