சரக்குச் சங்கிலி-8: அமெரிக்க லாரி டிரைவர்கள் கதி என்ன?-1


ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 


சொன்னால்,   நம்ப மாட்டிர்கள். 

நிஜமாகவே, வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்கிறன்றர்.

ஏன் தெரியுமா? கொரானா பயம்தான். வேறு என்ன. 

அமெரிக்காவில், 75 சதவிகிதம், ரோடு ட்ரான்ஸ்போர்ட்தான் சரக்கு பரிமாற்றத்துக்கு. அதாவது, லாரி போக்குவரத்துதான்.

நம் ஊரை விட கெடுபிடி அதிகம். 

ஒரு நாளைக்கு 11 மணி நேரம்தான் வண்டி ஓட்ட முடியும். ஏமாற்ற முடியாது. ஏனென்றால், எலக்ட்ரானிக் கருவி மூலம் எல்லா விஷயங்களும் பதிவு ஆகிடும். 

11 மணி  நேரத்துக்கு மேல் வண்டி ஓட்டினால்,  அபராதம். டிரைவர் அப்படி செய்தால், டிரக் முதலாளி அபராதம் கட்டணும். டிரைவர் ஓய்வுப் பற்றி அதிக கவனம். 

நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்த முடியாது. பெரிய டிரக் பார்க்கிங் நிறைய இருக்கு. எல்லா வசதிகளும் உண்டு. குளிக்க. உண்ண. கட்டணம் உண்டு. 

டீசல் திருட்டு? அப்படின்னா? அந்த மாதிரியான திருட்டுத்தனம் கேள்விப்பட்டதில்லை. போற வழியே கொலை அல்லது சரக்கு கடத்தல்/அபகரிப்பு ரொம்ப குறைச்சல். 

நம்ம ஊர் மாதிரியே அங்கேயும் நிறைய டிரைவர்-ஓனர். அவர்களுடைய சங்கம் தனி. புரோக்கர், ட்ரான்ஸ்போர்ட்டர் கூட கூட்டு இல்லை. ஏனென்றால், இரண்டு பேருடைய தேவைகள் வெவ்வேறு. நம் ஊரில் எல்லாம் கலப்பு.  

ஏகப்பட்ட தஸ்தாவேஜ்களை அரசாங்கத்துக்கு கொடுக்கணும். நிறைய நேரம் அதிலேயே செலவு ஆகும். 

டிரைவர் பற்றாக்குறை அமெரிக்காவிலும் உண்டு. லோடு ஏத்தி வண்டி ஓட்டினால்தான் வாடகை. வைட்டிங்கு, நோ பைசா. நம்ம ஊர் கதைதான். 

ஆனால், இந்த RTO தொல்லை பில்குல் இல்லை. அதாவது, லஞ்சம் இல்லை. நம்ம ஊர் மாதிரி சில தலைவர்கள் RTOகூட செட்டிங் பண்ணி, டோக்கன் பழக்கம் கிடையாது. அதாவது அரசாங்கத்தை ஏமாற்றி அலுவலர்கள் தங்கள் சொந்த  சொத்து சேகரிப்பு  கிடையாது. 

லஞ்சம் கொடுத்து ட்ரிவிங் லைசன்ஸ் வாங்க முடியாது. அந்த அளவுக்கு டைட் நிர்வாகம். 

ட்ரிவிங் கற்றுக்கொள்ள, செலவு அதிகம். நெடுஞ்சாலைலே போற வண்டி எல்லாமே ட்ராக்டர் ட்ரைலர்தான். ரிஜிட் வண்டி பார்க்க முடியாது. அதேபோல, தார்பாலின் கட்டின லாரி கிடையவே கிடையாது.

21 வயசுக்கு முன்னாடி நேஷனல் பெர்மிட் வண்டி ஓட்ட முடியாது. 18 லே இருந்து 21 வரை ஒரே மாநிலத்தில்தான் டிரக் ஓட்ட முடியும். தமிழ் நாடுன்னா தமிழ் நாட்டுக்குள்ளே மட்டும். பீகார்னா, பீகார் உள்ளுக்குள் மட்டும்.ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்குள் 18 வயது டிரைவர் வண்டி ஒட்டி செல்ல முடியாது. 

இப்போ டிரைவர் பற்றாக்குறை. அதனால், 18 வயது டிரைவர் நேஷனல் பெர்மிட் வண்டி ஓட்ட விடலாமா வேண்டாமா என்று ஆலோசிக்கிறார்கள். 

அமெரிக்கா டிரைவர் சராசரி வயது: 45.   இளைஞர்கள் வர விருப்பம் இல்லை. அதுவும் தவிர, கொரனா காரணாத்தால், கொத்து வேலை செய்யறாங்கள். டிரக் ட்ரிவிங், நோ. அதனால், கம்பெனிகள் புதிதாய் சேரும் டிரைவர்களுக்கு  "போனஸ்" கொடுக்கிறார்கள்.கோவிட் வந்தபிறகு, டிரைவர்களுக்கு ராஜா மரியாதை. 



எப்படி தமிழ்நாட்டு டிரைவர் ஹிந்தி தெரியாமல்  கஷ்டப்படுகிறார்களோ, அந்த மாதிரி சில அமெரிக்க டிரைவர்களுக்கு இங்கிலிஷ் தெரியாது. ஸ்பானிஷ் மொழி பேசுவார்கள். நிறைய பஞ்சாபி டிரைவர்கள்  அமெரிக்காவில் தொழில் செய்கின்றனர். 

நம் டிரைவர்கள்  நினைத்த  இடத்தில வண்டியை நிறுத்தி, காலைக்கடன்களைக் கழிப்பது போல, அமெரிக்க டிரைவர் செய்ய மாட்டார். பார்க்கிங் பொது முடித்து கொள்வார்கள். அல்லது, பெரிய பெப்சி/கோகோ கோலா பாட்டில்களில் நிரப்பி பின் தூர எறிவார்கள். 

இன்னும் நிறைய விஷயம் பேச இருக்கு. 

மீண்டும் சந்திப்போம், சீக்கிரம். 


Comments

Popular posts from this blog

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்